போட்டி போட்டு சென்ற மினி பேருந்துகள் - விரட்டி பிடித்த போலீசார்

கும்பகோணம் அருகே மதுபோதையில் மினிபேருந்தை இயக்கிய ஓட்டுனரை போலீசார் விரட்டி பிடித்தனர்.
போட்டி போட்டு சென்ற மினி பேருந்துகள் - விரட்டி பிடித்த போலீசார்
x
கும்பகோணம் அருகே மதுபோதையில் மினிபேருந்தை இயக்கிய ஓட்டுனரை போலீசார் விரட்டி பிடித்தனர். தாராசுரத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி இரண்டு மினி பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு ஒன்றை ஓன்று முந்தியபடி மோதும் வகையில் சென்றன. இதனையடுத்து பேருந்துகளை பின்தொடர்ந்து சென்று போலீசார் மடக்கினர். அப்போது ஒரு பேருந்தின் ஓட்டுனர் மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்