பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி சுட்டுக்கொலை - கண்காணிப்பு கேமராவில் சிக்கிய குற்றவாளிகள்

கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி சுட்டுக்கொலை - கண்காணிப்பு கேமராவில் சிக்கிய குற்றவாளிகள்
x
தமிழக கேரளா எல்லைப்பகுதி.. சோதனை சாவடியில் தனது வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தார் காவல் உதவி ஆய்வாளர் வில்சன்.... அப்போது தான் அந்த பயங்கரம் அரங்கேறியது. மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கியால் சுட , மொத்தம் 4 துப்பாக்கி குண்டுகள் உடலை துளைத்த நிலையில், சம்பவ இடத்திலே சடலமாக சாய்ந்தார் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உள்ள  அணுகுசாலை காவல்துறை சோதனை சாவடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடும் பரபரப்பு காட்சிகளை படம் பிடித்திருக்கிறது, அங்குள்ள சிசிடிவி

சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலே களியக்காவிளை போலீசாருடன் வந்த காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாத் மு வடந‌ரே, விசாரணையை முடுக்கி விட்டனர்.  தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகிறது காவல்துறை.... 
கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பதற்றமான சூழல் தொடர்வதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.   

இந்த நிலையில், தற்போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரது புகைப்படங்களை வெளியிட்டுள்ளது காவல்துறை... கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் படி அப்துல் சமீம் மற்றும் தோஃபிக் ஆகியோர் தான் இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பது குறித்த தகவல்களுக்காக தமிழக காவல்துறையினர் கேரள காவல்துறையின் உதவியை நாடியுள்ளனர். தமிழக எல்லையில் 4 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வெளியான செய்தியின் அதிர்வலைகள் அடங்காத நிலையில், போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட இந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 





Next Story

மேலும் செய்திகள்