கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி - பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதிப்பு

கொடைக்கானலில் உறைபனி சீசன் தொடங்கியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.
கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி - பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதிப்பு
x
கொடைக்கானலில் அவ்வப்போது பெய்த மழையால் குளிர் சற்று குறைந்திருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக  குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. இன்று கொடைக்கானல் ஏரிச்சாலையின் பல்வேறு பகுதிகளில் இன்று உறை பனி ஏற்பட்ட நிலையில் அங்கு வெப்பநிலை 6 டிகிரி ஃபாரன்ஹீட ஆக பதிவானது. இதனால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குளிரில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். சென்றவர்களும் பாதுகாப்பான உடைகளை அணிந்து பயிற்சிக்கு சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்