குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்த நபர் தலைமறைவு - செல்போனையும் அணைத்து வைத்ததால் பரபரப்பு
பதிவு : ஜனவரி 09, 2020, 01:12 PM
டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த நபர், தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த குரூப் 4  தேர்வில், சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூர் கிராமத்தை சேர்ந்த திருவராஜு என்பவர்  மாநில அளவில் முதலிடம் பிடித்தார். 46 வயதான திருவராஜு-க்கு, விஜயா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், கிராமத்தில் கால்நடை வளர்த்துக்கொண்டே, குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், அருகாமையில் உள்ள இளையான்குடி மற்றும் சிவகங்கை நகரத்தை விடுத்து, ராமேஸ்வரத்திற்கு சென்று குரூப் 4 தேர்வு எழுதிய திருவராஜு, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அன்று முதல் அவர் வீட்டிற்கு வராத நிலையில், திருவராஜுவின் தாயார் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே, தேர்வில் வெற்றிபெற்றதை தொடர்ந்து அவரை சந்திக்க வீட்டிற்கு சென்ற பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்த அவர், தனது செல்போனையும் அணைத்து வைத்துள்ளார். இதனால் பலமணி நேரம் காத்திருந்தும் அவரை சந்திக்க முடியவில்லை. இந்நிலையில், எந்த வசதியும் இல்லாத கிராமத்தில் இருந்து, 46 வயதில் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றதுடன், மாநில அளவில் திருவராஜு முதலிடம் பிடித்தது கிராமத்தினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்திஉள்ளது. மேலும், முறைகேடு நடந்ததாக கூறப்படும் ராமேஸ்வரத்தை தேர்வு செய்து அவர் எழுதி இருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - ஏரியில் மூழ்கி பலியான 25 மாடுகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, ஏரியில் மூழ்கி 25 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

26 views

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

51 views

பலத்த காற்றுடன் சென்னையில் திடீர் மழை

கடந்த இரண்டு மாதங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.

17 views

உணவின்றி சுற்றித் திரிந்த 70 வெளிமாநில தொழிலாளர்கள்- 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய அமைச்சர்கள்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் 70 பேர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் உணவு இன்றி அங்கு சுற்றித்திரிந்துள்ளனர்.

38 views

மதுரைக்கு ரயில் மூலம் வந்தடைந்த மருத்துவப் பொருட்கள்

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் ரயில் மூலம் மதுரை வந்தடைந்தது.

15 views

நாமக்கல் மாவட்டத்தில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நடமாடும் கடைகள் மூலம் 10 காய்கறிகள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.