களைகட்டிய பொங்கல் விழா - சமத்துவ பொங்கலிட்ட கல்லூரி மாணவ மாணவிகள்

பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கலிட்டு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் கல்லூரி மாணவ, மாணவிகள்
களைகட்டிய பொங்கல் விழா - சமத்துவ பொங்கலிட்ட கல்லூரி மாணவ மாணவிகள்
x
நீங்கள் காணும் காட்சி  சினிமா  படப்பிடிப்பு அல்ல.... கோவை அருகே கல்லூரி மாணவிகள் கொண்டாடிய பொங்கல்  தான் இது. சேலையில் அணிந்து வந்திருந்த  மாணவிகள், மண் பானைகளில் வெண் பொங்கல் மற்றும்  சர்க்கரை பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு மகிழ்ந்தனர். 

கோலமிட்டு,  கரும்பு, மஞ்சள், தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட படையல் பொருட்கள் வைத்து வழிபட்ட அவர்கள், மாடு, கன்றுக்குட்டிக்கு மஞ்சள் தெளித்து குங்குமம் வைத்து பொங்கல் ஊட்டி மாட்டு பொங்கலும் கொண்டாடினர். பின்னர்
மாணவிகள் அம்மி அரைத்து மஞ்சள் பூசிக்கொண்டனர்

இதுமட்டுமின்றி பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு  இழுத்தலில் மாணவிகள், உரி அடித்தலில் மாணவர்கள் என 
மகிழ்ச்சி ததும்ப கொண்டாடட்டம் களைகட்டியது...


Next Story

மேலும் செய்திகள்