சேலம் : ஆறரை கிலோ பழமையான ஐம்பொன் சிலை - பாதுகாப்பு மையத்தில் வைக்க உத்தரவு

சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பழமையான ஐம்பொன் சிலையை, கும்பகோணத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் :  ஆறரை கிலோ பழமையான ஐம்பொன் சிலை - பாதுகாப்பு மையத்தில் வைக்க உத்தரவு
x
சேலம் ஆத்தூர் அருகே கங்கவல்லியை சேர்ந்த ராஜசேகர் என்பவர், பழமையான ஐம்பொன் சிலை வைத்திருப்பதாகவும், அதனை அவர் விற்க முயற்சி செய்து வருவதாகவும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரிடம், சிலை வாங்குவது போல் நைசாக பேசி, போலீசார் அந்த சிலையை மீட்டனர். ஒன்றேகால் அடி உயரமும், ஆறரை கிலோ எடையும் கொண்ட அந்த ஐம்பொன் சிலை, கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாதுகாப்பு மையத்தில், அந்தச் சிலையை வைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன்  நாகேஸ்வரர் கோவிலில் உள்ள பாதுகாப்பு மையத்திற்கு, அந்த சிலை கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே கைது செய்யப்பட்ட ராஜசேகரும், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்