வேலை வாங்கித் தருவதாக பலரிடம் மோசடி - பெண்ணை கடத்தி சென்றதாக தாயார் புகார்
பதிவு : ஜனவரி 08, 2020, 10:33 AM
சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியில் வீட்டிலிருந்த இளம்பெண் கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த டிம்பிள்சியா என்ற பெண் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக சென்னை, தஞ்சை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவர், சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியில் தங்கியுள்ளார். அங்கு வந்த ஏமாற்றப்பட்டவர்கள், பணத்தை திரும்பி கொடுக்குமாறு, வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இளம்பெண் மற்றும் அவரது தந்தையை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், வீட்டிலிருந்த இளம்பெண்ணை சிலர், கடத்தி சென்றதாக, பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையறிந்த அவர்கள் உடனடியாக டிம்பிள்சியாவை பத்திரமாக அழைத்து வந்து, சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இருதரப்பு விவரங்களையும் கேட்டறிந்த காவல்துறையினர், இளம்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

650 views

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

476 views

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

171 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

57 views

பிற செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

31 views

ஊரடங்கை மீறி கோயிலில் ரகசிய வழிபாடு - கோயிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு லத்தி அடி

ஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க கோரியதை மீறி கோயிலில் வழிபாடு நடத்திய பூசாரி மற்றும் பொதுமக்களை போலீசார் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.

89 views

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

வாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

23 views

"2 மாதம் வீட்டு வாடகை வேண்டாம்" - மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள்

திருப்பூரில், தனது வீட்டில் தங்கியிருப்பவர்கள் 2 மாதம் வாடகை தர வேண்டாம் என அறிவித்த உரிமையாளர் மனிதம் மரணித்து போகவில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.

61 views

ஊர் சுற்றிய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து தோப்புக்கரணம் தண்டனை வழங்கிய போலீஸ்

திருமங்கலம் நகரில் ஜாலியாக சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த போலீசார் தோப்புக்கரண தண்டனை வழங்கினர்.

38 views

65 தொழிலாளர்களின் பசியை தீர்த்த போலீஸ் - போலீசாருக்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்

கேரளாவில் இருந்து 2 நாட்களாக உணவின்றி பயணம் செய்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு குழந்தைகளுடன் வந்த 65 தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் உணவு வழங்கினர்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.