டிப்- டாப் உடையணிந்து சூப்பர் மார்க்கெட்டில் திருட்டு - சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சி

திருத்தணி சூப்பர் மார்க்கெட் ஒன்றில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை டிப் - டாப் உடையணிந்து இளைஞர் ஒருவர் திருடியது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
டிப்- டாப் உடையணிந்து சூப்பர் மார்க்கெட்டில் திருட்டு - சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சி
x
திருத்தணி மாபொசி சாலையில் இயங்கி வரும்   சூப்பர் மார்க்கெட்டில் தான்  இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கடையில் டிப்டாப் உடையணிந்த இளைஞர் ஒருவர் சூப்பர் மார்க்கெட்டுக்கு லேப்டாப் பையுடன்  வந்துள்ளார். கடைக்குள் வந்ததும்  லேப்டாப் பையில் எண்ணெய், பருப்பு வகை பாக்கெட்டுகள், பிஸ்தா, முந்திரி மற்றும் வாசனை திரவியங்கள் என 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மறைத்து வைத்துள்ளார். 

இதனை  கண்காணிப்பு கேமிரா மூலம் கண்டறிந்த கடை உரிமையாளர் பாலாஜி, கடை மேற்பார்வையாளர் தசரதனுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தார்.  இதனையடுத்து தசரதன் இளைஞரின் பேக்கை சோதனை செய்ய முயன்றபோது, அங்கிருந்து டிப்-டாப் ஆசாமி தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கடையின் மேற்பார்வையாளர் தசரதன்,  திருத்தணி காவல் நிலையத்தில், புகார் அளித்தார். இதனையடுத்து திருத்தணி போலீசார் கடைக்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது பல நாட்களாக அந்த கடையில், டிப்-டாப் இளைஞரும் , அவருடன் ஒரு பெண்ணும் வந்து, மளிகை பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த வாசன திரவயங்கள் ஆகியவற்றை பையில் போட்டுக் கொண்டு திருடி சென்றது கண்டறிப்பட்டது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்