5 கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் : சிலைகள் பறிமுதல் - கடத்தியவர் கைது
பதிவு : ஜனவரி 08, 2020, 06:31 AM
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் ஐம்பொன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் ஐம்பொன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.  கெங்கவல்லி பகுதியில் ஐம்பொன் சிலை பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் பிரிவு டிஎஸ்பி ராஜாராம் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு ராஜசேகர் என்பவரின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது அவர் ஒன்றரை அடி உயரம் கொண்ட ஆறரை கிலோ எடையிலான  பஞ்சேலாக அம்மன் சிலை ஒன்றை கடத்தி பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்த அந்த ஐம்பொன் சிலை  5 கோடி ரூபாய் மதிப்பிலானது என்றும், அந்த சிலையை விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சிலையை பறிமுதல் செய்த போலீசார், சிலை கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜாராமை கைது செய்தனர்..மேலும் இந்த சிலை கடத்தல் சம்பவத்தில் வேறு யார் யார் தொடர்பில் உள்ளார்கள் என்பது குறித்து சிலை கடத்தல் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில், புதிதாக 646 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது.

59 views

புழல் சிறையில் இருந்து கடலூர் சென்ற கைதிகளுக்கு கொரோனா - பேரறிவாளனை விடுவிக்குமாறு அற்புதம்மாள் கோரிக்கை

புழல் சிறையில் இருந்து கடலூர் சிறைக்குச் சென்ற 2 சிறைவாசிகளுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக வரும் செய்தி அச்சம் தருவதாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.

37 views

புதிய மின்சார சட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு - மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

29 views

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் - கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த செவிலியர்கள்

தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து, மருத்துவ சேவையை செய்து வருகிறார்கள்.

43 views

மே 25 வரை 3,274 சிறப்பு ரயில்கள் இயக்கம் - 44 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு பயணம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் உள்ளதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

23 views

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு - மதுரை மாநகராட்சியின் முயற்சிக்கு பெற்றோர்கள் வரவேற்பு

மதுரை மாநகராட்சி பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.