ஒன்றிய குழுவில் தலைவர் பதவி வகிக்க அதிமுக தீவிரம்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஒன்றிய குழுவில் தலைவர் பதவி வகிக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.
ஒன்றிய குழுவில் தலைவர் பதவி வகிக்க அதிமுக தீவிரம்
x
ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 19 வார்டுகளில், 10 வார்டுகளை கைப்பற்றும் கட்சி தலைவர் பதவி வகிக்கலாம். அந்த வகையில், அதிமுக மற்றும் தேமுதிக சார்பில் 11 கவுன்சிலர்கள் உள்ளதால், தலைவர், துணை தலைவர் பதவிகளை கைப்பற்ற அதிமுகவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குதிரை பேரம் மற்றும் மூளைச்சலவை தடுக்க, மறைமுக வாக்கெடுப்பு நாளான 11 ஆம் தேதிவரை, தேமுதிக, அதிமுக கவுன்சிலர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தங்கியிருக்க செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் பரபரப்பை  ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்