ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி : வேட்பாளர்களை கர்நாடகாவுக்கு அழைத்துச் சென்ற அதிமுக
ஒசூர் அருகே ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிக்க அதிமுகவில் இரு தரப்புக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஒசூர் அருகே ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிக்க அதிமுகவில் இரு தரப்புக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஓசூர் அருகே சூளகிரி ஊராட்சியில் உள்ள 25 இடங்களில் அதிமுகவுக்கு 11 இடங்களும், தேமுதிகவுக்கு 2 இடங்களும், திமுகவுக்கு 5 இடங்களும், சுயேட்சைகளுக்கு 7 இடங்களும் கிடைத்தது. ஒன்றிய தலைவர் பதவியை பிடிக்க 13 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. இதில் அதிமுக சார்பில் 2 பேர் பதவியை பிடிக்க போட்டியிடும் நிலையில் ஒரு தரப்பு 15க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வாகனத்தில் கர்நாடகாவுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் மற்றொரு தரப்பும், திமுகவும் அதிர்ச்சியடைந்துள்ளது.
Next Story

