திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம் - தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம் - தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அதிகாலை 12.30 மணிக்கு கோவிலுக்குள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. காலை 9 மணிக்கு ஸ்ரீதேவி -பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி 32 அடி உயரம் கொண்ட தங்க ரதத்தில் எழுந்தருளினார். இந்த தங்க ரதத்தை பெண்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து இன்று மாலை சகஸ்கர தீப அலங்கார சேவை மற்றும் இரவு அதியாயன உற்சவம் நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளை ஏழுமலையான் கோவில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்