குரூப் 4 தேர்வில் முறைகேடு புகார் தொடர்பாக விசாரணையை தொடங்கியது டி.என்.பி.எஸ்.சி.

குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் குறிப்பிட்ட மையங்களில் தேர்வு எழுதியவர்களுக்கு அதிக அளவில் பணி வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விசாரணையை துவக்கியுள்ளது.
x
கடந்த செப்டம்பர் மாதம் நடந்த குரூப் 4 தேர்வில் கீழக்கரை, இராமேஸ்வரம்  தேர்வு மையங்களில் தேர்வெழுதியவர்கள் முதல் 40 இடங்களை பிடித்திருந்தனர். இந்த விவகாரம் வெளிவந்த நிலையில் தற்போது குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த குரூப் 2 ஏ தேர்விலும் இதேபோல் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 30 இடங்களை பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இவர்களில் தேர்வானவர்கள் 2018 ஆம் ஆண்டு இறுதியில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பிரச்சினை வெளிவந்துள்ளது. இந்த சூழலில் இந்த 2 தேர்வுகளிலும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விசாரணையை துவக்கியுள்ளது. அதன்படி வெற்றி பெற்ற தேர்வர்களின் விடைத்தாள்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியுள்ளது. மேலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்கள் எத்தனை பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்