தோட்டத்தில் சுற்றித்திரிந்த 8 அடி நீள மலைப்பாம்பு : மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்ட அதிகாரிகள்
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே தோட்டத்தில் சுற்றித்திரிந்த 8 அடி நீள மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்ட அதிகாரிகள்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே நாயோடை அணைப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் 8 அடி நீள மலைப்பாம்பு ஒன்று சுற்றித்திரிந்தது. இதனைகண்டு அதிர்ச்சியடைந்த தோட்ட உரிமையாளர் ஆண்டிவேல், வனத்துறைக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து அங்குசென்ற வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து, காரமடை வனப்பகுதியில் விட்டனர். சில நாட்களுக்கு முன்பு இதே தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்ட நிலையில், மீணடும் ஒரு மலைப்பாம்பு வந்தது, அப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

