முடிவுக்கு வருகிறது வங்கி கொள்ளை வழக்கு? - 15 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு

திருச்சி, சமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முடிவுக்கு வருகிறது வங்கி கொள்ளை வழக்கு? - 15 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு
x
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 470 சவரன் நகைகள், 19 லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டன.  அதன் தொடர்ச்சியாக, சத்திரம் பேருந்து நிலையம் அருகே தனியார் நகை கடையில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவங்களில், திருவாரூரை சேர்ந்த முருகன், அவரது மைத்துனர் சுரேஷ் உள்ளிட்ட கொள்ளைக் கும்பலை போலீசார் கைது செய்தனர்.  வங்கியில்  கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் பாதியளவு மட்டுமே  மீட்கப்பட்டுள்ள நிலையில், முருகனிடம்  விசாரணை மேற்கொள்வதற்கான  15 நாள் போலீஸ் காவல் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பெங்களூரு சிறையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள முருகனை, நாளை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.  அவனியம் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அடிப்படையில், பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்