கடலூர் : காலாவதியான மருத்துவ கழிவுகளுக்கு தீ வைப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே சாலையோரம் உள்ள குட்டையில் காலாவதியான மருத்துவ கழிவுகளை மூட்டை மூட்டையாக கொட்டிவிட்டு தீ வைத்துள்ளனர்.
கடலூர் : காலாவதியான மருத்துவ கழிவுகளுக்கு தீ வைப்பு
x
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே சாலையோரம் உள்ள குட்டையில் காலாவதியான மருத்துவ கழிவுகளை மூட்டை மூட்டையாக கொட்டிவிட்டு தீ வைத்துள்ளனர். இதனால் பாட்டில்கள் வெடித்து சாலையில் சிதறியதில்  வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு  ஏற்படுத்துவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 
உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும்  என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்