பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா : அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

தமிழகம் முழுவதும்,பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்குவதை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா : அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
x
கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில், பொங்கல் பரிசு வழங்கும் விழாவை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார். ஏரானமான பொதுமக்கள், ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுச்சென்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், பொங்கல் பரிசுத் தொகை அமைச்சர் தங்கமணி வழங்கி தொடங்கி வைத்தார்.  6 சட்டமன்றத் தொகுதிகளில்  அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் பரிசுத்தொகுப்பை வழங்கினர். தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை   ஆட்சித்தலைவர் பல்லவிபல்தேவ் தொடங்கி வைத்தார். ஆண்டு தோறும் அனைவருக்கும் வழங்கப்படும்  இலவச வேட்டி சேலைகளும் வழங்கப்பட்டன. விழுப்புரத்தில்  சட்டத்துறை அமைச்சர் CV.சண்முகம் கலந்து கொண்டு பொங்கல் பரிசுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.கண்டமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்