திருமண பரிசு பொருளில் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான வாசகம் : இஸ்லாமிய புதுமண தம்பதிக்கு வழங்கிய நண்பர்கள்
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கடலூரில் இஸ்லாமிய மணமக்களுக்கு,மாற்று மத நண்பர்கள் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான வாசகத்துடன் கூடிய பரிசினை வழங்கினர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கடலூரில் இஸ்லாமிய மணமக்களுக்கு, மாற்று மத நண்பர்கள் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான வாசகத்துடன் கூடிய பரிசினை வழங்கினர். மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஷஃபத் - ஷாஹின் ஆகியோரின் திருமண விழா நடைபெற்றது. இதில் இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஏராளமான நண்பர்கள் கலந்துகொண்டு, மணமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். அதில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், மும்மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமான வாசகங்கள் ஒட்டப்பட்டிருந்தது.
Next Story

