சென்னை தாம்பரம் : வீட்டின் பூட்டை உடைத்து 53 சவரன் கொள்ளை
சென்னை தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 53 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சென்னை தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 53 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். பெருங்களத்தூர், என்.ஜி.ஓ.காலனி பகுதியை சேர்ந்த மென் பொறியாளர் கார்த்திகேயன் சபரிமலைக்கு சென்றுள்ளார். இதனால் மனைவி, குழந்தைகள் அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் 53 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து பள்ளிக்கரனை போலீசார் வழக்குப் பதிவு செய்து, சி.சி.டி.வி. கேமிராவை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
Next Story

