சென்னை ஆவடி : 80 சவரன் தங்க நகை கொள்ளை

சென்னை ஆவடி அருகே வெளிநாட்டில் வேலை செய்யும் அதிகாரி வீட்டில் 80 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சென்னை ஆவடி : 80 சவரன் தங்க நகை கொள்ளை
x
சென்னை ஆவடி அருகே வெளிநாட்டில் வேலை செய்யும் அதிகாரி வீட்டில் 80 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.  திருமுல்லைவாயிலில் பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வரும் அருண்குமார், துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மாலா, அவரது மகள் வீட்டிற்கு பெங்களூரு சென்றுள்ளார். இதனால்  வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் , பீரோவை உடைத்து 80 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து திருமுல்லைவாயில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்