டெல்லியில் வசித்து வருபவர் தாம்பரம் வாக்காளரானது எப்படி? : வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக புகார்

டெல்லியில் வசித்து வரும் ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமாரின் பெயர், தாம்பரம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெல்லியில் வசித்து வருபவர் தாம்பரம் வாக்காளரானது எப்படி? : வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக புகார்
x
வருகின்ற 23 ஆம் தேதி  தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யவும் நேற்றும், இன்றும் மற்றும் வரும் 11,12ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில், கிழக்கு தாம்பரம்  கார்லி மேல்நிலை  பள்ளியில்   தாம்பரம் நகராட்சி பழைய வார்டு எண் 26 ல் உள்ள வாக்காளர்களை  சரிபார்க்கும் போது காஷ்மீரில் கவர்னரின் ஆலோசகராக பணியாற்றும் முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரி விஜயகுமாரின் பெயர் இடம்பெற்றுள்ளது. டெல்லியில் வசித்து வரும் விஜயகுமார் , தாம்பரம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது எப்படி என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது போன்ற குளறுபடிகள் நடைபெறாமல் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்