"தர்பார்" பட இசைக்கு வெளிநாட்டு கலைஞர்கள் - அனிருத்துக்கு இசைக் கலைஞர்கள் சங்கம் கண்டனம்

ரஜினியின் தர்பார் படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்த அனிருத், தமிழ் இசை கலைஞர்களை பயன்படுத்தாமல் புறக்கணித்துள்ளதாக இசைக்கலைஞர்கள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.
தர்பார் பட இசைக்கு வெளிநாட்டு கலைஞர்கள் - அனிருத்துக்கு இசைக் கலைஞர்கள் சங்கம் கண்டனம்
x
பேட்ட படத்தில் மரணமாஸ் காட்டிய இசையமைப்பாளர் அனிருத்,  இசையில் வெளிவந்துள்ள தர்பார் படத்தின் சும்மா கிழி, பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுஇந்த நிலையில் 'தர்பார்' படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிக்கு வெளிநாட்டு கலைஞர்களை பயன்படுத்தியதற்காக, இசையமைப்பாளர் அனிருத்துக்கு இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தர்பார் படத்தில் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு இசைக்கலைஞர்கள் பணியாற்றி உள்ள நிலையில், ஆயிரத்து
 200 பேர் உறுப்பினர்களாக உள்ள திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் இருந்து 5 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் தினா குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக எழுதிய கடிதத்திற்கும், அனிருத் பதில் தரவில்லை என்றும் அவர் கூறினார்.

50 வருட பாரம்பரியம் கொண்ட இந்த சங்கத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற பெரிய இசையமைப்பாளர்கள் உள்பட ஆயிரத்து 200 பேர் உறுப்பினர்களாக உள்ளதாக கூறும் தினா,
சங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாத, அனிருத்தை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறுகிறார். 

ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் படங்களில் வாய்ப்பளித்தால் பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள  தங்களின் வாழ்வாதாரம் உயரும் என்று இசைக்கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

பேட்ட, தர்பார் படங்களை தொடந்து ரஜினி படங்களில் 
தமிழ் இசைக்கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் திரைத்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்