குறைவான வாக்குகள் பெற்றவர் வெற்றி என அறிவிப்பு : எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்
கடலூர் மாவட்டம், விளாங்காட்டூர் ஊராட்சி மன்றத்தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வீரமுத்து என்பவர் 776 வாக்குகள் பெற்றார்.
கடலூர் மாவட்டம், விளாங்காட்டூர் ஊராட்சி மன்றத்தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வீரமுத்து என்பவர் 776 வாக்குகள் பெற்றார். பாலகிருஷ்ணன் என்பவர் 703 வாக்குகள் பெற்றுள்ளார். இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் தூண்டுதலில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி தோல்வியுற்ற பாலகிருஷ்ணனை வெற்றி பெற்றதாக அறிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள், 300க்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் - சேலம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வீரமுத்து வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சாலை மறியல் நீடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

