ஹெச்.ராஜா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் : அனைத்திந்திய மாணவர், இளைஞர் பெருமன்றம் சார்பில் புகார்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது குண்டுவீசுவோம் என பேசிய விவகாரத்தில், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது, நடவடிக்கை கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஹெச்.ராஜா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் : அனைத்திந்திய மாணவர், இளைஞர் பெருமன்றம் சார்பில் புகார்
x
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது குண்டுவீசுவோம் என பேசிய விவகாரத்தில், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது, நடவடிக்கை கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.  அனைத்திந்திய மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்த புகாரில், ஹெச்.ராஜா வன்முறையை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருவதாகவும், இதுதொடர்பாக அவரை கைதுசெய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சி தலைவர்களை இழிவாக பேசிய ஹெச்.ராஜாவுக்கு கண்டம் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்