கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து தலைவராக மின்மயானத்தில் சடலங்களை எரியூட்டுபவரின் மனைவி தேர்வு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து தலைவராக மின்மயானத்தில் சடலங்களை எரியூட்டுபவரின் மனைவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து தலைவராக மின்மயானத்தில் சடலங்களை எரியூட்டுபவரின் மனைவி தேர்வு
x
ராம்நகரை சேர்ந்த ரமேஷ் கடந்த ஐந்து ஆண்டுகளாக தாராபுரம் நகராட்சி மின்மயானத்தில் சடலங்களை எரியூட்டுபவராகவும் பணிமேலாளராகவும் வேலைபார்த்து வருகிறார். இவரின்  மனைவி செல்வி சுயேட்சையாக போட்டியிட்டு 982 வாக்குகளை பெற்று  வெற்றி பெற்றுள்ளார். எவ்வித அரசியல் பின்புலமும் இன்றி கணவன்- மனைவி மட்டும் வீடுவீடாக சென்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.  தம்மை வெற்றி பெற செய்த மக்களுக்காக சமூக பணியாற்றுவேன் என்று செல்வி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்