வீட்டின் வாசல் முன் நின்ற வாகனத்தை திருட முயற்சித்த பெண் - தப்ப முயன்ற திருடியை துரத்தி பிடித்த பொதுமக்கள்
சென்னையில் இருசக்கர வாகன திருட்டில் பெண்கள் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி தாயார் சாகிப் தெருவில் வசிக்கும் யாசர் அராபத், தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, குடும்பத்தினருடன் அமர்ந்து
இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது எதேச்சையாக சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, சந்தேகத்துக்கு இடமாக இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது.
சிறிது நேரத்தில் அவர்கள் கள்ளச்சாவி கொண்டு வாகனத்தை திருட முயற்சித்தனர்.
அதை கண்ட யாசர் அராபத் மற்றும் அவரின் சகோதரரும் அந்த பெண்களை பிடிக்க வெளியே வந்துள்ளனர்.
ஒரு பெண் தப்பி ஓடிய நிலையில், மற்றொரு பெண்ணை பொதுமக்கள் துரத்தி பிடித்துள்ளனர்.
சிசிடிவி ஆதாரங்களுடன் பிடிப்பட்ட அந்த பெண், காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அந்த பெண் ஜாம்பஜாரை சேர்ந்த மோனிஷா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பி சென்ற மற்றொரு பெண்ணையும் தேடி வருகின்றனர்.
வழக்கமாக வாகன திருட்டி ஈடுபட்டதாக ஆண்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது வாகனங்களை திருட முயற்சித்ததாக பெண் பிடிபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Next Story

