வரும் 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு - முதற்கட்டமாக ரூ.1677.40 கோடி ஒதுக்கீடு
பொங்கல் பரிசு வழங்குவதற்காக முதற்கட்டமாக கூட்டுறவு வங்கி கணக்கில் ஆயிரத்து 677 கோடியே 40 லட்சத்து 52 ஆயிரம் நிதியை தமிழக அரசு அனுப்பியுள்ளது.
பொங்கல் பரிசு வழங்குவதற்காக முதற்கட்டமாக கூட்டுறவு வங்கி கணக்கில் ஆயிரத்து 677 கோடியே 40 லட்சத்து 52 ஆயிரம் நிதியை தமிழக அரசு அனுப்பியுள்ளது. மண்டலவாரியாக இந்த வங்கிகளிலிருந்து பணத்தை பெற்று அந்தந்த மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுதொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வருகிற 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் பரிசுத்தொகை, பொங்கல் தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
Next Story

