நெல்லை கண்ணன், பெரம்பலூரில் கைது

பிரதமர் மோடி, அமித்ஷாவை அவதூறாக பேசியதாக பெறப்பட்ட புகாரின் மீது, நெல்லை கண்ணன், பெரம்பலூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை கண்ணன், பெரம்பலூரில் கைது
x
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நெல்லையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை அவதூறாக நெல்லை கண்ணன் பேசியதாக சர்ச்சை எழுந்தது.  இதற்கு, பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கண்ணனின் வீட்டை பா.ஜ.க.வினர் முற்றுகையிட முயன்றனர். இந்நிலையில், உடல்நலக் குறைவால்  மருத்துவமனையில்  நெல்லை கண்ணன் சேர்க்கப்பட்டார். இதனிடையே அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.  மதுரையில் மருத்துவமனையில் நெல்லை கண்ணன் சிகிச்சை பெறுவதாக கூறப்பட்ட நிலையில், நேற்று இரவு, பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்