"வாக்கு எண்ணிக்கை - கவனம் அவசியம்" : முகவர்களுக்கு, அதிமுக தலைமை வேண்டுகோள்

வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுக முகவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை - கவனம் அவசியம் : முகவர்களுக்கு, அதிமுக தலைமை வேண்டுகோள்
x
வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுக முகவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்கு எண்ணிக்கை நாளன்று முகவர்கள் அனைவரும் வாக்கு இயந்திரங்களில் சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்வதுடன், பதிவான வாக்குகளும், வாக்கு எண்ணிக்கையும் ஒரே அளவில் உள்ளதா என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால், அது குறித்து சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிக்கு தகவல் தெரிவிப்பதுடன், அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கைகளும் முடிந்து, முடிவு அறிவிக்கப்படும் வரை மையத்திலேயே இருக்க முகவர்களுக்கு அக்கட்சி  வலியுறுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்