உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் : தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்பு

உள்ளாட்சி தேர்தல் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற அனைத்து தேர்தல் பார்வையாளர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் : தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்பு
x
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தேர்தல் பார்வையாளர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது வேட்பு மனுக்கள் முறையாக பெறப்படுகிறதா, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. வாக்குபதிவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் வாக்கு சாவடி மையங்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும்,  மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்