சுகாதாரமற்ற நொறுக்குத்தீனியா பானிபூரி?

திருச்சி அருகே, தேவதானம் என்கிற இடத்தில் சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரித்த குடோன் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் எங்கும் பரவிவரும் பானிபூரி கலாச்சாரம் குறித்து எச்சரிக்கிறது இந்த தொகுப்பு...
சுகாதாரமற்ற நொறுக்குத்தீனியா பானிபூரி?
x
நம் ஊரில் மாலை நேர சிற்றுண்டி என்றால் வடை, பஜ்ஜி, போண்டா, சுண்டல் ஆகியவையே இருந்த நிலையில், தற்போது எல்லா ஊரிலும் கொடிகட்டி கோலோச்சுகிறது பானிபூரி. மைதா மாவில் தயாரிக்கப்படும் சிறு சிறு பூரி, அதற்குள் ஓட்டைபோட்டு மசாலாவும் -அந்த மசாலாவுக்குள் புளி, புதினா, பச்சைமிளாகாய் கரைத்த தண்ணீர் ஊற்றி கொடுப்பதுதான் பானி பூரி.
தெருவுக்கு தெரு தள்ளுவண்டி கடைகளில் விற்கப்படும் பானிபூரியை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் நிலையில், அதன் சுகாதாரமோ மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. முதலில் பூரி தயாரிக்கும் முறையே சுகாதாரமற்றதாக உள்ளது. சுகாதாரமற்ற இடத்தில், சுத்திகரிக்கப்படாத தண்ணீர்,  மாவை அருவருப்பான முறைகளில் பிசைவது என பல அவலங்கள் நடக்கின்றன. பானிபூரிக்கான மாவை கால்களால் பிசையும் வீடியோ காட்சிகள்கூட இதற்கு முன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பூரி தயாரிக்கும் எண்ணெய்யும் இரண்டாம் தரம்தான். பெரும்பாலும் மறு சுழற்சி எண்ணெய்களையே பயன்படுத்துவதாக புகார் எழுகிறது. இந்த நிலையில், திருச்சி அருகே தேவதானம் என்கிற இடத்தில் பானிபூரி தயாரிக்கும் வீட்டை ஆய்வு செய்தனர் சுகாதாரத் துறை அதிகாரிகள். அங்கு சுகாதாரம் இல்லாமல் பானிபூரி தயாரிக்கப்பட்டதால், அங்கிருந்தவர்களை எச்சரிக்கை செய்ததுடன், அந்த குடோனுக்கும் சீல் வைத்ததுள்ளனர். சில இடங்களிலும் சுகாதார முறையில் செய்யப்பட்டாலும், சாலையோர கடைகளின் சுத்தம் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்