மகாகவி பாரதியார் பிறந்தநாள் - 3,000 மாணவ, மாணவிகள் பங்கேற்ற நடைபயணம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்

மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்த நாளையொட்டி தமிழக அரசு, வானவில் பண்பாட்டு மையம் சென்னை பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து நிமிர்ந்த நன்னடை எனப்படும் நடைபயணம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
மகாகவி பாரதியார் பிறந்தநாள் - 3,000 மாணவ, மாணவிகள் பங்கேற்ற நடைபயணம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்
x
மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்த நாளையொட்டி தமிழக அரசு, வானவில் பண்பாட்டு மையம் சென்னை பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து நிமிர்ந்த நன்னடை எனப்படும் நடைபயணம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இதனை தொடங்கி வைத்தார். சென்னை பல்கலைக் கழகத்தில் தொடங்கி, காமராஜர் சாலை, வாலாஜா சாலை வழியாக திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் இல்லத்தில் இந்த பயணம் நிறைவுபெற்றது.  சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 32 கல்லூரிகளில் இருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாரதியாரின் பாடல்களை பாடியவாறு எழுச்சி நடைபயணம் மேற்கொண்டனர்.  கடந்த 26 வருடங்களாக இந்த நடைபயணம் பாரதியார் பிறந்த நாளன்று நடத்தப்படுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்