"நீதிமன்றத்தால் என்னை ஒன்றும் செய்ய முடியாது" - நித்யானந்தா

எத்தனை சங்கடங்கள் வந்தாலும் பொறுமையும் அகிம்சையும் ஆழ்ந்த அன்பும் இருந்தால் போதும் நம் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லுங்கள் என சிஷ்யர்களிடம் நித்தி ஆன்லைன் சத்சங்கம் வாயிலாக கோரிக்கை விடுத்திருக்கிறார்
நீதிமன்றத்தால் என்னை ஒன்றும் செய்ய முடியாது - நித்யானந்தா
x
என்ன புகார் வந்தால் என்ன..? என் கடன் ஆன்லைன் சத்சங்கம் தான் என்ற வார்த்தையில் திடமாக இருக்கிறார் நித்தி. கடந்த 2 நாட்களாக சத்சங்கத்தில் ஆஜராகாத நித்தி, அதற்கும் சேர்த்தே பேசி அசத்தியிருக்கிறார். தன்னுடைய தோற்றத்தை பற்றி சந்தேகம் எழுப்புவோருக்கு பதிலளிக்கும் விதமாக நித்தி பேசியிருப்பது தரமான சம்பவம்... பாலியல் புகார்கள், பண மோசடி புகார்கள் என எல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்திய வெளியுறவுத் துறையே நித்தி எங்கே இருக்கிறார் என தெரியாது என கைவிரித்திருக்கிறது. அப்படி இருக்க, தன் ஆசிரமத்தில் உள்ள சிஷ்யர்களுக்கு ஆழ்ந்த அன்பும், பொறுமையும், அகிம்சையும் தேவை என மகத்துவமான ஒரு அறிவுரையை வழங்கியிருக்கிறார். இந்து மதத்தின் வளர்ச்சியே தன்னுடைய பிரதான நோக்கம் என கூறும் நித்தி, நமக்குள் அடித்துக் கொண்டால் அது மதத்திற்கு தான் அழிவை உண்டாக்கும் என கூறியிருக்கிறார். 
காலம் எல்லாவற்றையும் ஆற்றும் என நம்பிக்கையோடு கூறியிருக்கும் நித்தி, தன்னையும் தன் சங்கத்தையும் அழிக்க சதிவலைகள் சூழப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். தன் மீதான புகார்களை நிரூபிக்கவே இயலாது என கூறும் நித்தி, நீதிமன்றத்தால் தன்னை எப்போதும் தண்டிக்க இயலாது என்றும், தான் மரணத்தை கடந்த மகான் என கூறியிருப்பது வேற லெவல் பேச்சு... தன் மீதான புகார்களுக்கு நேரடியாக விளக்கம் தருவார் என ஆன்லைன் சத்சங்கம் நிகழ்ச்சியை மணிக்கணக்கில் பார்த்தாலும், நித்தியின் பேச்சு என்னவோ கலகலப்பு ரகமாகவே காட்சி தருகிறது... 




Next Story

மேலும் செய்திகள்