கிறிஸ்தவர் ஐக்கிய பேரவையின் கிறிஸ்துமஸ் விழா : சுற்றுச் சூழலை பாதுகாக்க வீட்டுக்கு ஒரு மரம் நட முடிவு

கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவர் ஐக்கிய பேரவையின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா, திருச்சபை தலைவர்கள் கூடும் நிகழ்ச்சி மற்றும் பேரவையின் வெள்ளி விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று சுங்கான்கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது.
கிறிஸ்தவர் ஐக்கிய பேரவையின் கிறிஸ்துமஸ் விழா : சுற்றுச் சூழலை பாதுகாக்க வீட்டுக்கு ஒரு மரம் நட முடிவு
x
கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவர் ஐக்கிய பேரவையின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா, திருச்சபை தலைவர்கள் கூடும் நிகழ்ச்சி மற்றும்  பேரவையின்  வெள்ளி விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று  சுங்கான்கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை வகித்தார். கிறிஸ்மஸ் கேக் கட் உடன் தொடங்கிய நிகழ்வில் ஆயர்கள் ஜெரோம் தாஸ் வறுவேல், வின்சென்ட் மார் பவுலோஸ், சாம் யேசுதாஸ், சிசில் ராஜ், ராஜேந்திரன், மரியராஜ், கொர்நெலிஸ் உள்ளிட்ட 13 ஆயர்கள் , பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாட்டில் சமாதானம் நிலவ வேண்டி சமாதான புறா பறக்க விடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஒரு மரக்கன்றுகள் கொடுத்து,  நடவு செய்து நாட்டில் சுற்றுச் சூழலை  பாதுகாப்பது எனவும் இதில் முடிவு செய்யப்பட்டதாக ஆயர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்