"ஆளுங்கட்சி தவறு செய்யும் போது தி.மு.க. தட்டிக்கேட்கும்" - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி கைவிடப்பட்டது தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி தவறு செய்யும் போது தி.மு.க. தட்டிக்கேட்கும் - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
x
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி கைவிடப்பட்டது தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கொல்லைப் புறமாக நுழைந்த இந்தியை தடுத்து விரட்டிய தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு   நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். ஹிந்தி கற்று தரும் முடிவை கைவிட்டதற்கு தி.மு.க. வரவேற்பதாக குறிப்பிட்டுள்ள தங்கம் தென்னரசு, ஆளுங்கட்சி தவறு செய்யத் துணியும் போதெல்லாம் அதனைத் தட்டிக் கேட்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. இருக்கும் என்பதை  தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புவதாக கூறியுள்ளார். 





Next Story

மேலும் செய்திகள்