குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாம் : பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில், பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர். இதனையொட்டி நடைபெற்ற வீரர்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாம் : பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம்
x
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில், பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர். இதனையொட்டி நடைபெற்ற வீரர்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.  தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பயிற்சி பெறும் வீரர்கள் நாட்டின் பல இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இந்த முகாமில், கடந்த 46 வாரங்கள் பயிற்சி பெற்ற, 502 பேர், ராணுவ வீரர்களாக சேவையாற்ற, சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர். மேலும், பயிற்சியில் சிறந்து விளங்கிய, 4 வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்