நிஜ வாழ்க்கையில் ஒரு அவ்வை சண்முகி: வேலைக்காக பெண்ணாக மாறிய ஆண்

சினிமா பாணியில் ஆண் ஒருவர் வேலை கிடக்க பெண்ணாக மாறிய சம்பவம் மானாமதுரை அருகே அரங்கேறியுள்ளது.
நிஜ வாழ்க்கையில் ஒரு அவ்வை சண்முகி: வேலைக்காக பெண்ணாக மாறிய ஆண்
x
அவ்வை சண்முகி படத்தில் தனது குழந்தைக்காக பெண் வேடமிட்டு, வீட்டு வேலைக்கு செல்லும் காட்சி இடம்பெற்றிருக்கும்.
இதைபோல் நிஜ வாழ்க்கையில் தம் பெற்றோரை காப்பாற்றுவதற்காக பெண் வேடமிட்டு தம்மை ராஜாத்தியாக பெயர் மாற்றி கொண்டவர் ராஜா.
மானாமதுரை அருகே மலையனேந்தலை சேர்ந்த 40 வயதான இவர், வறுமை, போதிய கல்வியின்மையால் வேலை இன்றி தவித்து வந்துள்ளார். 
எங்கும் வேலை கிடைக்காத நிலையில் பெண்ணாக மாறினால் வீட்டு வேலையாவது  கிடைக்கும் என்ற  யோசனை வந்ததுள்ளது. பெண் வேடமிட்டு வேலை தேட தொடங்கிய அவர் கடந்த ஆறு மாதங்களாக மூன்று வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். மலையனேந்தலில் இருந்து மதுரைக்கு லுங்கி சட்டையுடன் ஆணாக வரும் இவர் மறைவான இடத்திற்கு சென்று சேலை,கம்மல், சவுரி முடி, மேக் அப் என தம்மை ஒரு டிப் டாப் பெண்ணாக உருமாறி கொள்கிறார். வீட்டு வேலை முடிந்ததும், வேஷத்தை களைத்துவிட்டு வீடு திரும்பும் இவர், தம் பெற்றோரை காப்பாற்ற தற்போது போதிய வருமானம் கிடைப்பதால், நிஜ அவ்வை சண்முகியாகவே வாழ தொடங்விட்டார்.



Next Story

மேலும் செய்திகள்