இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்வது, தேர்தல் பணியை எவ்வாறு மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்