அ.ம.மு.க-வை பதிவு செய்ய தடை கோரி மனு : மனுதாரர் புகழேந்திக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அ.ம.மு.க-வை பதிவு செய்ய தடை கோரி மனு : மனுதாரர் புகழேந்திக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
x
நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தினகரனின் அ.ம.மு.க கட்சி பதிவுக்கு தடை விதிக்க கோரி, அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி  கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரனின் வாதங்களை கேட்ட பிறகு பேசிய நீதிபதி, நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்தார். அ.ம.மு.கவில் இருந்து வெளியேறிய பிறகு அக்கட்சி குறித்து கவலை ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, புகழேந்தி அளித்த பிரமாண பத்திரத்தை நீக்கிவிட்டு அ.ம.மு.க கட்சி பதிவு குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தினார். மேலும் இந்த வழக்கில் தேர்தல் ஆணையம், தினகரன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை டிசம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்