"வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை வைத்திருந்தாலும் காப்பீட்டு தொகையாக ஒரு லட்சம் மட்டுமே"- அதிர்ச்சி தகவல்
பதிவு : டிசம்பர் 04, 2019, 10:40 AM
வங்கிகளில் வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு நடப்பு கணக்கு போன்றவைகளில் எவ்வளவு தொகை வைத்திருந்தாலும் காப்பீட்டு தொகையாக ஒரு லட்சம் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளது.
அனைத்து வணிக வங்கிகள், ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வெளிநாட்டு வங்கிகளின் இந்திய கிளைகள் ஆகியவற்றில் உள்ள வைப்புத்தொகையை, ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகம் காப்பீடு செய்துவருகிறது. இந்நிலையில் வங்கிகள் தோல்வியுற்றாலோ, கலைக்கப்பட்டாலோ எவ்வளவு காப்பீட்டு தொகை கிடைக்கும் என்று வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. 

 அதற்கு அந்த கழகம் அளித்துள்ள பதில் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. வங்கிகளில் வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, வைப்புத்தொகை போன்றவைகளில் எவ்வளவு தொகை வைத்திருந்தாலும் காப்பீட்டு தொகையாக ஒரு லட்சம் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளது. இந்த தொகையை உயர்த்த முடியுமா? என்று கேட்டதற்கு அதற்கு தேவையான தகவல் தங்களிடம் இல்லை என்றும் கூறியுள்ளது

பிற செய்திகள்

சுத்தமான 13 கடற்கரைகள் அடங்கிய பட்டியல் : பட்டியலில் கோவளம், ஈடன் கடற்கரைகள்

உலகில் சுத்தமான மற்றும் சுகாதாரமான கடற்கரை வரிசையில் தமிழகத்தின் கோவளம் மற்றும் புதுச்சேரியின் ஈடன் கடற்கரைகள் இடம் பிடித்துள்ளன.

6 views

"ஐதராபாத்தை தொடர்ந்து பீகாரில் நிகழ்ந்த கொடூரம்" - சிறுமி பலாத்காரம் செய்து தீ வைத்து எரிப்பு"

ஐதராபாத்தில், கால்நடை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்அதிர்வலை அடங்குவதற்குள், பீகாரிலும் இதுபோல ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

87 views

ஐதராபாத் நிறுவனத்திடமிருந்து ரூ.170 கோடி பெற்றதாக புகார் : காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

ஐதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து 170 கோடி ரூபாய் பெற்றதாக புகார் கூறப்படும் விவகாரத்தில் விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

16 views

பிரியங்கா காந்தி வீட்டில் கார் நுழைந்த விவகாரம் : 3 போலீஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடை நீக்கம்

டெல்லியில் பிரியங்கா காந்தி வீட்டு வளாகத்திற்குள் அனுமதியின்றி கார் நுழைந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் 3 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

54 views

"முதலீடுகளை கவரும் வகையில் சீர்திருத்தம் தொடரும்" - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

முதலீடுகளை கவரும் வகையில் சீர்திருத்தங்கள் தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.

14 views

பழிவாங்கும் நோக்கில் எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதாவை பாஜக கொண்டுவரவில்லை - அமித்ஷா விளக்கம்

சோனியா காந்தி குடும்பத்தாரின் பாதுகாப்பில் மட்டுமல்ல, 130 கோடி மக்களின் பாதுகாப்பிலும் மத்திய அரசு அக்கறை கொண்டிருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.