சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்ட வழக்கு - அரசு தரப்பு கோரிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்
பதிவு : டிசம்பர் 03, 2019, 01:35 PM
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதன் திட்ட மேலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், மத்திய அரசு தரப்பில் கூடுதல் ஆவணம் மற்றும் திட்டம் தொடர்பான விளக்க மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கோரினார். இந்த வழக்கு தொடர்பாக புதிய மனு  தாக்கல் செய்ய உள்ளதால் அதுவரை வழக்கு விசாரணையை  ஒத்தி வைக்க வேண்டும் எனவும்  அவர் கோரிக்கை வைத்தார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞரிடம் ஏற்கனவே மனு நிலுவையில் இருக்கும் போது எதற்கு புதிய மனு?   என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்வதை வைத்தே  தங்களின் வாதத்தை தொடர இயலும்  என கூறினர் . இதனைத் தொடர்ந்து மத்திய அரசு கால அவகாசம் கோரியது தொடர்பாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

"பழ வியாபாரியிடம் லஞ்சம்?": காவல்துறை மறுப்பு - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் சர்ச்சை

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் வியாபாரிகள் தள்ளுவண்டிகளில் பழ வியாபாரம் செய்து வருகின்றனர்.

28 views

பிற செய்திகள்

பெட்ரோல் பங்கில் டீசலில் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்வதாக புகார்

கடலூரில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசலில் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

12 views

பழம்பெரும் பாடலாசிரியர், கவிஞர் முத்துசாமி காலமானார் - நாடக கலைஞர்கள் அஞ்சலி

பழம்பெரும் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் முத்துசாமி வயது முதிர்வு காரணமாக காலமானார்.

31 views

தேசியக் கொடியை அவமதித்ததாக எஸ்.வி சேகர் மீது புகார்

பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி சேகர் தேசியக் கொடியை அவமதித்ததாக கூறி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

19 views

எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்று, மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

15 views

பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு

சொத்து உரிமையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

14 views

கட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு எங்களை வழிநடத்துங்கள் - ரமேஷ் சென்னிதாலா ராகுல் காந்திக்கு கடிதம்

கட்சியின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு, எங்களை வழிநடத்துங்கள் என்று, கேரளா எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.