சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்ட வழக்கு - அரசு தரப்பு கோரிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்
பதிவு : டிசம்பர் 03, 2019, 01:35 PM
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதன் திட்ட மேலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், மத்திய அரசு தரப்பில் கூடுதல் ஆவணம் மற்றும் திட்டம் தொடர்பான விளக்க மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கோரினார். இந்த வழக்கு தொடர்பாக புதிய மனு  தாக்கல் செய்ய உள்ளதால் அதுவரை வழக்கு விசாரணையை  ஒத்தி வைக்க வேண்டும் எனவும்  அவர் கோரிக்கை வைத்தார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞரிடம் ஏற்கனவே மனு நிலுவையில் இருக்கும் போது எதற்கு புதிய மனு?   என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்வதை வைத்தே  தங்களின் வாதத்தை தொடர இயலும்  என கூறினர் . இதனைத் தொடர்ந்து மத்திய அரசு கால அவகாசம் கோரியது தொடர்பாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

பிற செய்திகள்

ஒலிம்பிக் கட்டுப்பாடுகள் - இந்தியா கண்டனம்

ஒலிம்பிக் போட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளை இந்திய ஒலிம்பிக் அமைப்பு நியாயமற்றது என விமர்சித்துள்ளது.

7 views

கேரளாவில் நடந்த விபத்தில் புதிய திடுக்கிடும் தகவல்கள்

கேரளாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

96 views

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

35 views

விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் "BEAST"

Thalapathy65 இன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

74 views

'நீட் வேண்டாம்' என்ற கருத்துக்களையே இதுவரை அதிகமானவர்கள் தெரிவித்துள்ளனர் -ஆணைய தலைவர் ஏ.கே.ராஜன்

இதுவரை வந்த தரவுகளை வைத்து ஆலோசனை செய்துள்ளோம்.தரவுகளை தொடர்ந்து சேகரித்து வருகிறோம்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.