சேலம்: பாகனை மிதித்து கொன்ற கோயில் யானை
பதிவு : டிசம்பர் 03, 2019, 08:45 AM
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண்டாள் யானை திடீரென ஆக்ரோஷமாகி பாகனை மிதித்துக் கொன்றது.
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண்டாள் யானை திடீரென ஆக்ரோஷமாகி பாகனை மிதித்துக் கொன்றது. மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து 2009 ம் ஆண்டு  கொண்டு வரப்பட்ட ஆண்டாள் என்ற  யானையை  காளியப்பன் என்பவர் பராமரித்து வந்துள்ளார்.  இந்நிலையில் யானையின் உடல் நிலையை மருத்துவர்கள்  பரிசோதித்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது அவர்களை யானை தாக்க முயற்சித்துள்ளது. இதனையடுத்து அதனை கட்டுப்படுத்த முயற்சித்த பாகன் காளியப்பனை யானை தாக்கியுள்ளது. அதில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு காளியப்பன் உடல் மீட்கப்பட்டது.  சுமார் 68 வயதான ஆண்டாள் யானை தாக்கியதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

"பழ வியாபாரியிடம் லஞ்சம்?": காவல்துறை மறுப்பு - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் சர்ச்சை

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் வியாபாரிகள் தள்ளுவண்டிகளில் பழ வியாபாரம் செய்து வருகின்றனர்.

28 views

பிற செய்திகள்

தந்தி டிவி செய்தி எதிரொலி - காணாமல் போன ஓடையை தேடி வரும் அதிகாரிகள்

அரியலூர் மாவட்டம் உல்லியக்குடி பகுதியில் இருந்த ஊர்கா ஓடையை காணவில்லை விவசாயிகள் புகார் அளித்திருந்த நிலையில் ஓடையை தூர்வாரக்கோரி நீதிமன்றம் உத்ரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

71 views

"உட்கார நேரமில்லை, அவமரியாதை நிகழவில்லை" - தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் விளக்கம்

அரசு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருதுதுரை நின்றுகொண்டு பேசுவது போன்ற புகைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது,.

229 views

பயணிகள், புறநகர் ரயில் சேவைக்கான தடை நீட்டிப்பு

பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

13 views

என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு

என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிலையை பொறுத்து மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 600 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

102 views

பெட்ரோல் பங்கில் டீசலில் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்வதாக புகார்

கடலூரில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசலில் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

12 views

பழம்பெரும் பாடலாசிரியர், கவிஞர் முத்துசாமி காலமானார் - நாடக கலைஞர்கள் அஞ்சலி

பழம்பெரும் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் முத்துசாமி வயது முதிர்வு காரணமாக காலமானார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.