சென்னையில் உயர்ந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் - 2.5 அடி முதல் 10 அடி வரை உயர்வு

வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னர் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.
சென்னையில் உயர்ந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் - 2.5 அடி முதல் 10 அடி வரை உயர்வு
x
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, சென்னையில்  கடந்த 28 ஆம் தேதி முதல் கன மழை கொட்டி வருகிறது. அதன் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 2.5 அடி முதல் 10 அடி வரை  உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதம் மாதவரம் பகுதியில் 20.7 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 14 அடியாக  உயர்ந்துள்ளது. ராயபுரம் பகுதியில் 23.7 அடி இருந்த நீர்மட்டம் தற்போது  21.2 அடியில் நீர் கிடைக்கிறது. வளசரவாக்கத்தில் 21.2  அடியில் இருந்த  நீர்மட்டம் தற்போது 7.2 அடி வரை உயர்ந்து 15.4 அடியில் உள்ளது.அண்ணாநகரில் 19 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 13.4 அடியாக உயர்ந்துள்ளது.அடையாறு, சோழிங்கநல்லூர், அம்பத்தூர் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.




Next Story

மேலும் செய்திகள்