உள்ளாட்சி தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
x
மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக,  மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் , இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி, உள்ளிட்ட  கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டதில் வாக்கு பதிவு இயந்திரத்துடன்  விவி பேட் மூலம் தேர்தல் நடத்த வேண்டும், மேயர், மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்யும் முறையை கொண்டு வர வேண்டும், முழுமையாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஏற்கனவே அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்