காரைக்குடியில் இளைஞர் வெட்டிக்கொலை - சிசிடிவியில் பதிவான கொலை சம்பவம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்குடியில் இளைஞர் வெட்டிக்கொலை - சிசிடிவியில் பதிவான கொலை சம்பவம்
x
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரைக்குடியை சேர்ந்த முன்னாள் டாஸ்மாக் ஊழியர் பஞ்சவர்ணம், நேற்றிரவு ரயில் நிலையம் பகுதிக்கு செல்போனில் பேசியபடி சென்றுள்ளார். அப்போது காரில் வந்த மர்மகும்பல், அவரை சராமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், பஞ்சவர்ணம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் உடலை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில், இந்த கொலை சம்பவம் பதிவாகியிருந்தது. சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்