மீனாட்சி கோயிலில் இலவச லட்டு பிரசாதம் : காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்

புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
x
சென்னையில் இருந்தபடி  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு கோயிலின் 2ஆம் பிரகாரம் வழியாக வெளியே வந்த பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வினய் லட்டு பிரசாரம் வழங்கினார். பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் 30 கிராம் எடையளவில் தயாரிக்கப்படுகிறது. இதற்காக 20க்கும் மேற்பட்டோர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இலவச லட்டை பிரசாதமாக பெற்ற பக்தர்கள், மனது மிகவும் நிறைவாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்