கோவை பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கு : தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

கோவை பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கில், குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கோவை பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கு : தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
x
கோவையைச் சேர்ந்த ஜவுளிக் கடை உரிமையாளர் ரஞ்சித். இவரது குழந்தைகள் முஸ்கான் மற்றும் ரித்திக் ஆகிய இருவரும் 2010 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பள்ளி வேன் ஓட்டுநர் மோகனகிருஷ்ணன், அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  அதில், குற்றவாளி மோகனகிருஷ்ணன் போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்த நிலையில், மனோகரனுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் இரட்டைத் தூக்கு தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து 2012ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.  இந்த தீர்ப்பை எதிர்த்து, மனோகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள், மனோகரனின் ஆயுள் தண்டனையை குறைக்க மறுப்பு தெரிவித்ததுடன், மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்