பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் : அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

மழை காலத்தில் உயிர்சேதம் மற்றும் பொருட் சேதம் ஏற்படாமல் தவிர்க்க, அனைத்து துறை செயலர்களும், துறை தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
x
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச்செயலகத்தில், ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மழைக்காலங்களில் விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மீட்புக்குழுக்கள் குறுகிய காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய ஏதுவாக தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், நோய் பரவாமல் தடுக்க ப்ளீச்சிங் பவுடர், மருந்துகள் இருப்பில் வைத்திட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவில் இருப்பு வைக்க வேண்டும் என்றும்,  உயிர்சேதம், பொருட் சேதம் ஏற்படாமல் தவிர்க்க, அனைத்து துறை செயலர்களும், துறை தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்படவும் அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்