தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தாக்கம்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தாக்கம்
x
* சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த குண்டுக்கல் கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி உயிரிழந்தார். 

* கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியோடு 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

* பரமக்குடியில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசின் போக்குவரத்து துறை முதன்மை செயலர் சந்திரமோகன் மற்றும் ஆட்சியர் வீரராகவராவ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.  

* தர்மபுரி மாவட்டம் கம்பநல்லூர் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு,  சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தான்.

Next Story

மேலும் செய்திகள்